95வது சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வு இன்று (01) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் குருணாகல மாளிகாபிட்டிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 23வது கூட்டுறவுத் தினத்தை முன்னிட்டு இலங்கையில் 95வது கூட்டுறவு தினம் கொண்டாடப்படுகிறது.
'அனைவரையும் பாதுகாக்கும் கூட்டுறவு' என்ற தொனிப்பொருளில் இம்முறை கூட்டுறவு தினம் கொண்டாடப்படுகிறது.
கூட்டுறவு முறையானது உலகில் மிக பிரபலமான மக்கள் அமைப்புக்களில் ஒன்றாகும். 18ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உருவான கூட்டுறவு முறையில் தற்போது 95 உலக நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு, கூட்டுறவு அபிவிருத்தி திணைககளம், இலங்கை தேசிய கூட்டுறவுச் சபை என்பவற்றின் பங்களிப்புடன் மாகாண கூட்டுறவு திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.