இன்று (29) ஹட்டன்- டி.கோ.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்ற ஹைலண்ட்ஸ் கல்லூரியின் 125வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
கல்லூரியின் அதிபர் எஸ். சிறிதரன் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவை நினைவூட்டும் வகையில் முத்திரை வெளியிடப்பட்டதுடன் த ஜலண்டர் நினைவு மலரும் வெளியிடப்பட்டது.
பல்வேறு வகையிலும் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்கள் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டும் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், தபால் துறை அமைச்சர், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகம் தொண்டமான் முத்து சிவலிங்கம் மத்திய மாகாண முதலமைச்சர் சரத்ஏக்கநாயக்க மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம் ராமேஸ்வரன், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உட்பட கல்லூரியின்பழைய மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.