யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் 18 மில்லியன் ரூபா நிதிச்செலவில் மட்டக்களப்பு - செங்கலடியில் நிர்மாணிக்கப்பட்ட அமிர்தம் கிழக்கின் பாராம்பரிய உணவகம் நேற்று (27) திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி லிபுஷியா சொபுகோ, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் உட்பட பலர் கலந்துகொண்டன்.
கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசம் அதிக இழப்புக்களை சந்தித்திருந்தது. இதில் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் இப்பாராம்பரிய உணவகம் அமைக்கப்பட்டது.
குறித்த உணவகத்தில் எமது மண்ணுக்குரிய பாரம்பரிய உணவுகள் மற்றும் உள்ளுரில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி, பழங்கள் மற்றும் மண்பாண்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
LDA_dmu_batti