இலங்கை இராணுவத்தின் 21ஆவது இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இராணுவ ஜெனரல் பதவிநிலை மற்றும் பாதுகாப்பு படைப் பிரதானியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இப்பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.
1980 பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி இராணுவ சேவையில் இணைந்த லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா, 37 வருடம் தொடர்ச்சியாக இராணுவத்திற்கு சிறந்த சேவையை வழங்கியுள்ளார். 1981 ஜூலை மாதம் 18ஆம் திகதி 2ஆவது லெப்டினன்ட் ஆக இலங்கை முதலாவது பொறியியல் படைப்பிரிவில் இணைந்து சேவையை ஆரம்பித்தார். 1985இல் கெப்டன் ஆகவும் 1989ல் மேஜராகவும் 1994ல் லெப்டினண்ட் கேர்ணல் ஆகவும் 1997ல் கேர்zல் ஆகவும் 2003ல் பிரிகேடியராகவும் 2009 நவம்பர் மாதம் 30ம் திகதி மேஜர் ஜெனரலாகவும் பதவி உயர்வு பெற்ற இவர், 2015 பெப்ரவரி மாதம் 22ம் திகதி லெப்டினன்ட் ஜெனரல் பதவிக்கு வந்தார்.
லெப்டினன் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா கொழும்பு ரோயல் கல்லூரி பழைய மாணவராவார்.