நிதி மற்றும் ஊடக அமைச்சினால் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் அஸி திஸி ஊடக புலமைப்பரிசில் திட்டம் 2017 இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பல்வேறு கற்கை நெறிகளை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் இப்புலமைப்பரிசில் திட்டத்திற்காக நாடு முழுவதிலும் உள்ள இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் முழு நேரம், பகுதி நேரம், சுதந்திரமாக பணியாற்றுவோர், பிராந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் இணைய ஊடகவியலாளர்க என அனைவரிடமிருந்தும் விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஊடக கற்கை நெறிகளை தொடரவுள்ள தெரிவு செய்யப்படும் ஊடகவியலாளர்களுக்கு 100,000 வரை புலமைபரிசில் நிதி வழங்கப்படும் என்பதுடன் குறித்த விண்ணப்பதாரி இதற்கு முன்னர் அஸி திஸி புலமைபரிசிலை பெறாதவராக இருப்பது அவசியம்.
பணிப்பாளர் (ஊடகம்) நிதி மற்றும் ஊடக அமைச்சு, இல 163, கிருலபன அவென்யு, பொல்ஹேன்கொட, கொழும்பு என்ற முகவரிக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 31ம் திகதிக்கு முன்பாக கிடைக்கும் வகையில் பூர்த்தி விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை www.media.gov.lk என்ற இணையதள முகவரியில் பிரவேசித்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலதிக தகவல்களுக்கு 011 - 2, 513 645, 011 - 2 513 459 மற்றும் 011 - 2 513 460 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்ளவும்.