புதிய மருந்து உற்பத்தி நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (26) மாலை திறந்து வைக்கப்பட்டது.
கண்டி, பல்லேகலை பிரதேசத்தில் நிருவப்பட்டுள்ள இம்மருந்து உற்பத்தி நிலையமானது இலங்கையில் உள்ள மிகப் பெரிய மருந்து உற்பத்தி நிலையமாகும். இவ்வுற்பத்தி நிலையத்தில் வருடாந்தம் 1900 மில்லியன் திட மற்றும் திண்ம ஜெலட்டின் மருந்து கெப்சியுல்ஸ் மற்றும் வில்லைகள் உற்பத்தி செய்யப்படும்.
இம்மருந்து உற்பத்தி நிலைய திறப்பு விழாவில் சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.