• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

நீர்வளத்திற்கு பொறுப்புக்கூறுவதற்கான நிறுவனமின்மையே சிக்கல்

நாட்டில் நீர்வளம் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டிய தனியொரு நிறுவனம் காணப்படாமை நீர் முகாமைத்துவத்தில் உள்ள பாரிய சிக்கலாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
நேற்று  (23) பிற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற “சுபென் பிரஜா அபிமானி” மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பௌதீக ரீதியில் எமக்கு கிடைக்கும் நீரின் அளவு, எமது நாட்டைப் போன்று பத்து மடங்கு பாரிய நிலப்பகுதிக்கு போதுமானதாக காணப்பட்டபோதிலும், உரிய முறையில் முகாமை செய்யப்படாமையின் காரணமாகவே நீர்ப் பிரச்சினையை எதிர்நோக்கவேண்டியுள்ளது. 
 
 நீர்வளம் தொடர்பாக பொறுப்புக்கூறும் தனியானவொரு நிறுவனம் காணப்படாமை போன்றே பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் என்பன நீர் முகாமைத்துவம், நீர் பாதுகாப்பு மற்றும் சிக்கனம் தொடர்பாக குறைந்த பொறுப்புடன் செயற்படுதல் நீர் முகாமைத்துவத்தின் அடிப்படை பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
 
நீரைச் சிக்கனமாகப் பாவித்தல், நீர் பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக அனைவரும் பொறுப்புடன் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டியது மிகவும் அவசியம் என்றும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.
 
 
கிராமத்து மக்களின் தாகத்தை தீர்க்கும் சமூக அடிப்படை அமைப்புக்களை பலப்படுத்தி நெறிப்படுத்தும் பொறிமுறையொன்றினை தயாரித்தல், மக்கள் மயப்படுத்தல் மற்றும் கௌரவிப்பதற்காக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சும், தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களமும் இணைந்து இச்செயற்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
 
 
சமூக நீர் அமைப்புக்களினால் தயாரிக்கப்பட்ட விசேட பத்திரிகை இதன்போது ஜனாதிபதியிடம்  கையளிக்கப்பட்டது.  அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அமைச்சரவையில் முன்வைத்து தேவையான நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்று அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.
 
அண்மையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்க கொலோன் குளோபல் கொரிய நிறுவனத்தினால் இரண்டு மில்லியன் ரூபாவுக்கான காசோலையும் இதன்போது ஜனாதிபதியிடம்  வழங்கப்பட்டது.
 
சிறுநீரக நோய் காணப்படும் மாவட்டங்களிற்காக 70 நீர் சுத்திகரிப்பு உபகரணங்களை வழங்குதல், யுனிசெப் அன்பளிப்பில் 100க்கும் அதிகமான நீர்த்தாங்கிகளை சமூக நீர் அமைப்புக்களுக்கு  வழங்குதல், சர்வதேச நீர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இதன்போது நடைபெற்றதுடன் அவற்றை ஆரம்பித்து வைக்கும் வகையில் ஜனாதிபதி  பங்குபற்றினார்.
 
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், சந்ராணி பண்டார, தலதா அத்துகோரல, இராஜாங்க அமைச்சர் மருத்துவ கலாநிதி சுதர்சனி பெர்ணான்டோபுள்ளே ஆகியோரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் சரத் சந்ர விதான உள்ளிட்ட அதிகாரிகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

cabinet Decisions 12.08.2024

13 August 2024

Cabinet Decisions taken at  the Cabinet Meeting Conducted ...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.