சப்ரகமுவ, ஊவா மற்றும் தெற்கு ஆகிய மாகாணங்களை மையப்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட சுகாதார மத்திய நிலையம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த மாகாணங்களில் உள்ள பின் தங்கிய பிரதேச மக்களின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு இக்கேந்திர சுகாதார மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களின் எல்லையில் அமைந்துள்ள பலாங்கொட, வெலிஓய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இம்மத்திய நிலையத்தை அமைப்பதற்காக சப்ரகமுவ மாகாணசபை 350 மில்லியன் ரூபா நிதியை செலவிட்டுள்ளது.
மகப்பேற்றுசேவை, சிறுவர் மற்றும் ஆயுர்வேத சேவை என்பவற்றை இம்மத்திய நிலையத்தினூடாக வழங்குவதற்கு மாகாணசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தவிர இக்கட்டிடத்தில் வாசிகசாலை, வணிக செயற்பாட்டு நிலையம் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மத்திய நிலைய கட்டிட திறப்பு விழாவில் முதலமைச்சர் மஹிபால ஹேரத், மாகாணசபை உறுப்பினர் அகில எல்லாவல, மாகாண கட்டுப்பாட்டு ஆணையாளர் திருமதி சுசிலா ராஜபக்ஷ, உதவிச் செயலாளர் டப்ளியு. ஆர். எஸ்.கே. வீரசேக்கர மற்றும் உதவி மாகாண கட்டப்பாட்டு ஆணையாளர் சமன் குமார ஆகியோர் கலந்துகொண்டனர்.