டெங்கு ஒழிப்பு மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான நேரடி தொலைகாட்சி கலந்துரையாடல் இன்று (24) இரவு 9.30 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரச மற்றும் தனியார் தொலைகாட்சிகளில் ஒலிபரப்பப்படவுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் மிக முக்கித்துவம் மிக்க குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள திட்டங்கள் தொடர்பில் தௌிவுபடுத்தலுடன் குறித்த விடயம் மக்களை தௌிவுபடுத்துவது இக்கலந்துரையாடலின் நோக்கமாகும்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்தில் நடைபெறவுள்ள இந்நேரடிக் கலந்துரையாடல் ரூபவாஹினி, சுயாதீன தொலைக்காட்சி, வசந்தம தொலைக்காட்சி, டிவி தெரண, சுவர்ணவாஹினி, சியத்த, சிரச, சக்தி, ஹிரு மற்றும் டிஎன்எல் ஆகிய தொலைக்காட்சி சேவைகளில் ஔிபரப்பப்படவுள்ளது.
சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, மொரட்டுவ பல்கலைக்கழக சிரேசஷ்ட விரிவுரையாளர், பொறியிலாளர் மகேஷ் ஜயவீர, விசேட வைத்திய நிபுணர்ஹசித்த திசேரா ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஒரு தொலைக்காட்சி சேவையில் இருந்த ஒரு ஊடகவியலாளர் வீதம் இக்கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் அவ்வூடகவியலாளர்களுக்கு குறித்த விடயம் தொடர்பில் உள்ள அனைத்து பிரச்சினைகள், கேள்விகளை ஜனாதிபதியிடம் ஏனைய குழுவினரிடமும் தௌிவுபடுத்திக்கொள்ள முடியும்.
இதனூடாக நாட்டில் அதிகம் கலந்துரையாடப்படும் விடயமான டெங்கு மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் ஆராய்ந்தறிந்து மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு ஊடக நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.