அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் நிகழ்வு இன்று (11) மாலை திணைக்களத்தில் நடைபெற்றது.
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் சங்கைக்குரிய தமர அமில தேரர் உட்பட இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க மதங்களைச் சார்ந்த குருமார்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் , முப்படை ஊடக பேச்சாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.