நிலக் கண்ணிவெடி அபாயமற்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரகடனப்படுத்தும் நிகழ்வு இன்று (21) சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்சுவாமிநாதன் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்றது.
இன்று காலை மட்டக்களப்பு பாடுமீன் விடுதி வளாகத்தில் நடைபெற்ற மிதிவெடி அகற்றல் தொடர்பான காட்சிப்படுத்தல்களைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் வெடிபொருள் அபாயக்குறைப்பை அண்மித்த மாவட்டமாக பிரகடனப்பபடுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது வரவேற்புரையை நிகழ்த்திய அரசாங்க அதிபர் திருமதி பிஎஸ்.எம்சார்ள்ஸ், நிலக்கன்னிவெடிகள் இல்லாத முதலாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் மாற்றப்பட்டமையானது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இதனைச்சாத்தியப்படுத்திய மக் நிறுவனம், இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவு மற்றும் அதற்குதவிய நாடுகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.
மீள்குடியேற்ற அமைச்சர், உயர்ஸ்தானிகர்களது உரைகளையடுத்து, முக்கியத்துவம் மிக்கதான நிலக்கண்ணி வெடிகளற்ற மாவட்டமாகப் பிரகடனப்படுத்தும் சான்றிதழ்கள் கையொப்பமிடப்பட்டதுடன், மக் நிறுவனம், இலங்கை இராணுவம் ஆகியவற்றுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வுகளில், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மிதிவnடி அகற்றும் பிரிவுகளின் உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில், அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப், கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நசிர் அகமட், ஐக்கிய இராட்சியத்தின் உயர்ஸ்தானிகர் ஜேம்ஜ் டோரிஸ், ஆவஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரேஸ் ஹற்சசன், பாராளுமன்ற உறுப்பினர்களான அலிசாகிர் மௌலானா, எஸ்வியாளேந்திரன், ஜப்பான் தூதரகத்தின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் கூட்டுத்தாபனப்பிரிவின் தலைவர் சாக்கி வரதனி, கனடா உயர்ஸ்தானிகராலய அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் ஜெனிபர் ஹார்ற், பிரிகேடியர் அமித் செனவிரயத்ன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
LDA_dmu_batti