பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது ஏற்படும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான தேசிய மட்ட திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தகவல் மற்றும் தகவல் தொடர்பாடல் நிறுவனம் (ICTA) மற்றும் இலங்கை கணனி அவசர அவசர பதிலளிக்கும் அமைப்பின் ஒருங்கிணைப்பு என்பன ஒத்துழைப்பு வழங்கவுள்ளன.
கல்வியமைச்சின் தகவல் தொழில்நுட்பம் பிரிவுனூடாக இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
பாடசாலை மாணவர்கள் கணனி மற்றும் கையடக்கத் தொலைபேசிகளினூடாக இணையதளத்தை சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் சில சந்தர்ப்பங்களில் தேவையற்ற முறையில் பயன்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் மாணவர்களுக்கு வழிகாட்டுவதே இத்தேசிய திட்டத்தின் நோக்கமாகும்.
அவசியமான வழிகாட்டல் மற்றும் தகவல்கள் அடங்கிய இணையதளமொன்று உருவாக்குவதுடன் ஏற்படும் பிரச்சினைகளை கேட்கும் மற்றும் பதிலளிக்கும் முறையொன்றும் இதில் உருவாக்கப்படவுள்ளது.
ஏற்கனவே பாடசாலை கணனி பாதுகாப்பு செயல் பதிலளிப்பு ஒருங்கிணைப்பு (EDUCSIRT) உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதனை செயற்படுத்துவதற்கு சுமார் 100 ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தகவல் தொழில்நுட்ப மாணவ சமூகத்தை பாடசாலை மட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ICTA தெரிவித்துள்ளது.