செமட்ட செவன (அனைவருக்கும் நிழல்) வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கேகாலை மாவட்ட பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு நாளை (21) வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ளது.
கேகாலை நகரசபை கேட்போர்கூடத்தில் மாலை 2.00 மணிக்கு இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் 500 பயனாளிகளுக்கு 50 மில்லியன் ரூபா நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது என்று கேகாலை மாவட்ட வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் ஐ.எம். சந்திரசேக்கர தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் கேகாலை மாவட்ட அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தெரிவித்துள்ளது.