இலங்கை சனநாயக குடியரசின் இரண்டாவது பிரதமராக மக்களால் தெரிவு செய்யப்பட்ட காலம் சென்ற டட்லி சேனாநாயக்கவின் 106 வது பிறந்த தின கொண்டாட்டம் இன்று (19) நடைபெறவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரியவின் வழிகாட்டலில் பொரளை சேனாநாயக்க சுற்றுவட்டத்தில் உள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு அருகாமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
டட்லி செல்ட்டன் சேனாநாயக்க (Dudley Shelton Senanayake) ஜூன் மாதம் 19, 1911 பிறந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த இவர் சுதந்திர இலங்கையின் பிரதமராக மூன்று தடவைகள் பதவியில் இருந்தவர்.
இலங்கையின் முதலாவது பிரதமர் டி எஸ். சேனாநாயக்கவின் மூத்த மகனான டட்லி சேனாநாயக்க, கல்கிசை புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றவர். பின்னர் கேம்பிரிட்ஜ் கோர்ப்பசு கிறிஸ்டி கல்லூரியில் இயற்கை அறிவியல் துறையில் உயர் படிப்பை மேற்கொண்டார். பின்னர் லண்டன் மிடில் டெம்பிளில் பாரிஸ்டராகப் பணியாற்றினார். இவர் 1936 அரசியலில் நுழைந்தார்.