இந்நிகழ்வில் நிதி மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் லசந்த அலகியவன்ன, பாராளுமன்றின் பதில் செயலாளர் நாயகம் நீல் இத்தவெல்ல மற்றும் பாராளுமன்ற உயரதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஊடக அறிக்கை
- In Latest News
பாராளுமன்ற 70 ஆண்டு பூர்த்தி- விடேச அமர்வு
பாராளுமன்றில் 70வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ம் திகதி விசேட பாராளுமன்ற அமர்வொன்று இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
யுஎஸ்எயிட் நிறுவனம் மற்றும் பாராளுமன்றம் இணைந்து, பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.
இவ்விசேட அமர்வில் சார்க் நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்களும் உலகத் தலைவர்களும் பங்குபெறுவர் என்று சபாநாயகர் தெரிவித்தார்.
மேலும், கடந்த 70 வருடங்களாக செயற்பட்டு வரும் இலங்கை பாராளுமன்றம் கடந்த காலத்தில் 1060கயில் இடம்பெற்ற இரண்டு இராணுவ புரட்சிகள், 1971இல் இடம்பெற்ற ஆயுதப்புரட்சி மற்றும் 1989இல் இடம்பெற்ற இளைஞர் புரட்சி என்பவற்றின் போதும் தொடர்ச்சியாக இயங்கியது. இலங்கையில் நிலவிய 30 வருடகால பயங்கரவாத செயற்பாடுகளினால் இடம்பெற்ற பல்வேறு பிரச்சினைகளின் போதும் பாராளுமன்ற ஜனநாயகத்தில் மாற்றம் ஏற்படவில்லை. இது பாரிய அடைவாகும்.
பாராளுமன்றங்களின் சங்கத்தினால் இலங்கை பாராளுமன்றம் பாராட்டப்படவுள்ளது. உலகின் பல்வேறு பாகங்களிலும் இருந்து அழைத்து வரப்பட்ட 50இற்கும் 60இற்கு இடைப்பட்ட இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 2,3 மாதங்களில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை பாராளுமன்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்தபோதிலும் சார்க் நாடுகள், ஆசிய மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் எமது பாராளுமன்றிற்கு வந்து சென்றுள்ளமை எமது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.