பாதிக்கப்பட்ட முதியோர் தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள '118' உடனடி தொடர்பு இலக்கம் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு நேற்று (15) கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில், பாதிக்கப்பட்ட மற்றும் பல்வேறு இன்னல்களுக்குள்ளாகியுள்ள முதியோர் தொடர்பில் உடனடியாக அறிவிப்பதற்கான 118 இலக்கம் எழுதப்பட்ட ஸ்டிக்கர்கள் பஸ்களில் ஒட்டப்பட்டன.
முதியோர் செயலகத்தினால் இச்சமூக தெளிவூட்டல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.