தேசிய நல்லிணக்கத்தை வலியுறுத்தி 'அபிலாஷை' எனும் தலைப்பில் புகைப்படக்கண்காட்சி ஒன்று 2017 செப்டெம்பர் மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுக்குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சியில் நல்லிணக்கம் தொடர்பில் தாம் எடுத்த புகைப்படங்களை சமர்ப்பிக்குமாறு நிபுணத்துவம் வாய்ந்த மற்றும் சாதாரண புகைப்படக்கலைஞர்களிடம் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் பூர்த்தியடையவுள்ள நிலையில், சாதாரணமானதும், சமத்துவமானதும் சமூகத்தை கட்டியெழுப்பும் பயணத்தில் இலங்கையர்களுக்கு நல்லிணக்கம் என்பது எதனை உணர்த்துகிறது என்பதை வெளிப்படுத்துவதே இந்த கண்காட்சியின் நோக்கமாகும்.
இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களிலிருந்து 70 சிறந்த படங்கள் தெரிவு செய்யப்பட்டு, நிபுணத்துவம் வாய்ந்த நடுவர்கள் குழுவினால் மதிப்பீடு செய்யப்படும்.
2017 செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுக் கண்காட்சியின் போது காட்சிப்படுத்தப்படும். மேலும், தெரிவு செய்யப்படும் படங்கள், 2018ம் ஆண்டுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் நாட்காட்டியில் பிரசுரிக்கப்படவுள்ளதுடன் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் வெளியிடப்படவுள்ள கையேட்டிலும் பிரசுரிக்கப்படவுள்ளது.
சாதாரண புகைப்படக்கலைஞர்கள் தமது ஸ்மார்ட்போன்களினூடாக எடுக்கும் படங்களை கூட சமர்ப்பிக்க முடியும் . சாதாரண நிலை மற்றும் நிபுணத்துவ நிலை ஆகிய பிரிவுகளில் வெற்றி பெறுவோருக்கு பெறுமதி வாய்ந்த பரிசுகள் வழங்கப்படும்.
இது தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைமை அதிகாரி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கருத்துத் தெரிவிக்கையில்,'பொது மக்களுக்கு இந்த விடயம் தொடர்பில் மேலும் எம்முடன் தொடர்புகளை ஏற்படுத்த உதவியாக அமைவதுடன், நல்லிணக்கம் என்பதால் என்ன உணர்த்தப்படுகிறது என்பதை ஆக்கபூர்வமான வகையில் தெரிவிக்கக்கூடியதாக இருக்கும்' என்றார்.
ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் ஆலோசகர் போல் கொட்பிரி கருத்துத் தெரிவிக்கையில், 'இந்த நடவடிக்கையினூடாக இலங்கையர்களுக்கு தமது எதிர்பார்ப்புகளை நாட்டின் எதிர்காலத்துக்காக வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பமளிக்க நாம் கைகோர்த்துள்ளோம். இந்த கண்காட்சியானது சக இலங்கையர்களுடன் ஒருமைப்பாடு பற்றி கலந்துரையாடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க ஏதுவாக அமைய வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும். நல்லிணக்கத்தின் மூலமாக, நாட்டில் காணப்படும் பரந்த மக்கள் மற்றும் கலாசாரங்கள் ஆகியவற்றை ஒருமைப்படுத்த முடியும் என நாம் கருதுகிறோம்' என்று குறிப்பிட்டார்.
புகைப்படங்களை அனுப்பவேண்டியமுறை : புகைப்படவியலாளரின் பெயர், புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் மற்றும் விண்ணப்பத்துக்கான தலைப்பு ஆகியன குறிப்பிட்டு, சமர்ப்பிக்கும் படத்தின் அளவானது 25MB ஐ விட அதிகரிக்காமல், அதிகூடிய துல்லியதன்மையுடனான சுய பிரதியை , This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படல்வேண்டும்.