இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்க ஜப்பான் அரசு எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் உயர்ஸ்தானிகர் கென்சிசுகா நுமா (Kenichisuga Numa) தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் அமைச்சர் தலத்தா அத்துகோரளவுடன் நேற்று (15) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜப்பான் உயர்ஸ்தானிகர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தை வலுவூட்டும் வகையில் தொழிற்பயிற்சிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் நவம்பர் மாதம் கைச்சாத்திடப்படும் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் இலங்கைகான ஜப்பான் உயர்ஸ்தானிகரலாயத்தின் இரண்டாம் செயலாளர் டெக்புமி சூட்டோ (Takefumi Suto ), வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ். வித்தானகே, அமைச்சின் ஆலோசகர் திருமதி பத்மினி ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.