தகவல் அறியும் சட்டம் சமூக கலாசாரத்திற்கு அப்பால் செல்ல முடியுமா? என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நாளைமறுநாள் (17) அன்று காலை 9.30 மணிக்கு மாத்தறை தபால் நிலைய கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கை தகவல் அறியும் சட்டமூலத்தின் ஆலோசகர், முன்னாள் அமைச்சின் செயலாளர் பியதிஸ்ஸ ரணசிங்க, தேசிய ஊடக அமைப்பின் அமைப்பாளர் ஊடகவியலாளர் மந்தனா இஸ்மயில் அபேவிக்கிரம ஆகியோர் இந்நிகழ்வில் உரையாற்றவுள்ளனர்.
தேசிய ஊடக அமைப்பு மற்றும் சமத்துவத்திற்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நிகழ்வு என்பன இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளன.