சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு துர்நடத்தையினை ஒழிப்போம் முறையான மகிழ்ச்சியை ஏற்படுத்துவோம் எனும் தொனிப் பொருளில் நோயற்ற தேசமொன்றை உருவாக்குவோம் - போதை ஒழிப்பு வழிப்புணர்வு ஊர்வலம் இன்று (15) வியாழக்கிழமை மட்டக்களப்பு – செங்கலடி நகரில் நடைபெற்றது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகம், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம், சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சு சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்ய விழிப்புணர்வு ஊர்வலம் பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமாகி செங்கலடி – பதுளை வீதி சந்திவரை சென்றது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக ஊழியர்கள், சமுர்த்தி ஊழியர்கள் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் பிரதிநிதிகள் வழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
புகைத்தல் புற்றுநோயை ஏற்படுத்தும், புகைத்தலை அழிக்க எங்களோடு கைகோருங்கள், புகைத்தலை ஒழிப்போம் இதயத்தைப் பாதுகாப்போம், புகைத்தலில் ஆரம்பம் மரணத்தில் முடிவு, புகைத்தலை ஒழிப்போம் சுகமான வாழ்க்கையைத் தேடுவோம் போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தி கோசங்களையெழுப்பியவண்ணம் ஊர்வலமாக சென்றனர்.
LDA_dmu_batti