சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான 40 பேர்சஸ் தனியார் காணியொன்று களுபோவில வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
காலஞ்சென்ற கல்கெவல கெதர சந்ராவதி அம்மையார், திருமதி. இந்திராணி த கொஸ்தா மற்றும் திருமதி. கமலா த கொஸ்தா ஆகியோருக்கு சொந்தமான தெஹிவல, களுபோவில, வைத்தியசாலை வீதி, இலக்கம் 205 எனும் முகவரியில் அமைந்துள்ள காணியே இவ்வாறு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உறுதிப் பத்திரம் இந்திராணி த கொஸ்தா மற்றும் கமலா த கொஸ்தா ஆகியோரால் நேற்று (13) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. அக்காணி உறுதிப்பத்திரத்தினை ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கையளித்தார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ கலாநிதி ஜயசுந்தர பண்டார, களுபோவில போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி அசேல குணவர்தன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.