• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

இருதயநோய் முற்காப்புச் செயலமர்வு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதயநோய்ச்சிகிச்சைப்பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இருதயம் சார் நோய்களுக்கான முற்காப்பு நடவடிக்கைச் செயற்பாட்டின் ஒரு பகுதியாக மட்டக்களப்பு கூட்டுறவுக் கல்லூரியில் விளக்கமளிக்கும் செயலமர்வொன்று நடைபெற்றது.
 
நேற்று (13) மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.கனகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வில் மட்டக்களப்பு கூட்டுறவுக் கல்லூரி அதிபர் கே.வி தங்கவேலும் கலந்து கொண்டார்.
 
கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கள நடைபெற்ற இச் செயலமர்வினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இருதயநோய் சிகிச்சைப்பிரிவு வைத்தியர் ஆர்.மேகதீபன் நடத்தினார்.
 
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இருதயநோய் சிகிச்சைப்பிரிவு வைத்திய நிபுணர் கே.அருள்நிதி தலைமையில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்படடுவரும் இருதயம் சார் நோய்களுக்கான முற்காப்பு நடவடிக்கைச் செயற்பாட்டின் கீழ் திணைக்களங்கள் பாடசாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இது போன்ற விழிப்புணர்வுச் செயலமர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், ஒழுங்கு படுத்தலின் அடிப்படையில் இருதயம் சார் நோய் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
இவ் விழிப்புணர்வுச் செயலமர்வில் நீரழிவு நோய் மற்றும் அதன் தாக்கம், அதன் ஊடாக உருவாகும் இருதயம் சார் நோய்கள், உணவு வாழ்க்கை முறையின் மாற்றத்தின் தேவை, நோய்த்தடுப்பு, உயற்பயிற்சியின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
 
இதில் மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு கூட்டுறவுக் கல்லூரி பயிலுனர்கள் அடங்கலாக நுற்றுக்கும் மேற்பட்டோர் பங்கு பற்றினர்.
 
இச் செயலமர்வினை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் என். அருளானந்தம் ஒருங்கிணைத்திருந்தார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருதய நோயைக் கட்டுப்படுத்தி சிறந்து ஆரோக்கிய மான சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான செயற்பாடுகள் இருதயநோய் சிகிச்சைப்பிரிவு வைத்திய நிபுணர் கே.அருள்நிதி தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வைத்திய நிபுணர் கே.மேகதீபன் தெரிவித்தார்.
 
LDA_dmu_batti
 

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

cabinet Decisions 12.08.2024

13 August 2024

Cabinet Decisions taken at  the Cabinet Meeting Conducted ...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.