வெள்ளைச் சீனி விலை அதிகரிப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் அதிகாரசபை எச்சரித்துள்ளது.
வெள்ளை சீனி விலை அதிகரிப்பானது நுகர்வோர் அதிகாரசபை சட்டத்திற்கு எதிரான செயலாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள நுகவர்வோர் அதிகாரசபை, சீனி விலை அதிகரிக்கப்படவேண்டுமாயின் அதிகாரசபையின் அனுமதியை பெறவேண்டும் என்று அத்தியவசிய பொருள்கள் இறக்குமதியாளர் சங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.