குழந்தை, சிறுவர்களை பயன்படுத்தி யாசகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கையை இலங்கை பொலிஸ் சிறவர் மற்றும் மகளீர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
குழந்தைகளுடன் யாசகம் செய்பவர்கள் கைது செய்வதனூடாக இச்செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இதன் நோக்கமாகும்.
கடந்த மாரச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மே மாதம் வரையான காலப்பகுதியில் 11 ஆண் பிள்ளைகளும் 7 பெண்பிள்ளைகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். இச்சிறுவர்கள் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு அதில் நான்கு பேர் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மிகுதி 14 பேரும் நீதிமன்ற உத்தரவின்படி பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பிள்ளைகளை பயன்படுத்தி யாசகம் கேட்பது அதிகரித்துள்ள நிலையிலேயே சிறுவர் மற்றும் மகளிர். துஷ்பிரயோக தடுப்பு பிரிவின் 42 நிலையங்களினூடாக கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் குறித்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.