இலங்கை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான மூன்றாண்டு திட்டமென்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
துறைமுக மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த அமரசிங்கவின் ஆலோசனையின் பேரில் இலங்கை துறைமுக அதிகாரசபையின் தற்போதைய பணிப்பாளர் கலாநிதி பராக்கிரம திஸாநாயக்க மற்றும் முகாமையாளர் ஆகியோரின் வழிகாட்டலில் இம்மூன்று வருட திட்டம் ஆரம்பமாகவுள்ளது.
நவீன உலகில் துறைமுகம் மற்றும் கப்பற்றுறையில் ஏற்பட்டுள்ள நவீன வளர்ச்சிகளுக்கு முகங்ககொடுக்கும் வகையிலான மூலோபாய வழிமுறைகள் உள்ளடக்கப்பட்டதாக இவ்வபிவிருத்தித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
துறைமுக அதிகாரசபையின் தற்போதைய வருமானமான 44 பில்லியன் ரூபாவை அதே வகையில் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு பெற்றுக்கொள்வதே இவ்வபிவிருத்தித் திட்டத்தின் நோக்கமாகும்.
இலங்கை துறைமுக அதிகாரசபையின் செயற்பாடு மற்றும் பெறும் பயனை அபிவிருத்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அமைச்சரின் வழிகாட்டலில் புதிய முகாமைத்துவத்தினூடாக இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. துறைமுக அதிகாரசபையின் கீழுள்ள ஏனைய அனைத்து துறைமுகங்களும் அபிவிருத்தி செய்வதற்கான மூலோபாயங்கள் மற்றும் அவற்றில் மேற்கொள்ளக்கூடிய வர்த்தக நடவடிக்கைகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கான புதிய திட்டத்திற்கான வரைவு உருவாக்கப்படும் போது துறைமுகத்தை பயன்படுத்துவோர், தொழிற்சங்கங்கள், வர்த்த சமூகம் ஆகியோரின் கருத்துக்களும் உள்வாங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.