வடமாகாண பாடசாலைகளில் நிலவும் கணிதம் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப பாட வெற்றிடங்களை நிரப்பும் வகையில் இன்று (10) 219 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.
யாழ். இந்து கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நியமனங்களை வழங்கினார்.
அதில் பௌதீகவியல் பாடத்திற்கு 16 பட்டதாரிகளுக்கும், இரசாயனவியல் பாடத்திற்கு 11 பட்டதாரிகளுக்கும், உயிரியல் பாடத்திற்கு 13 பட்டதாரிகளுக்கும், இணைந்த கணிதம் பாடத்திற்கு 10 பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்பட்டது.
மேலும், உயிரியல் தொழிநுட்பம் பாடத்திற்கு 15 பட்டதாரிகளுக்கும், பொறியியல் தொழிநுட்பம் பாடத்திற்கு 12 பட்டதாரிகளுக்கும், தொழிநுட்பத்திற்கான விஞ்ஞானம் பாடத்திற்கு 2 பட்டதாரிகளுக்கும் விஞ்ஞான பாடத்திற்கு 95 பட்டதாரிகளுக்கும், கணித பாடத்திற்கு 45 பட்டதாரிகளுக்குமாக தொத்தமாக 219 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.