'புரவெசி அத்வெல' மனிதாபிமான செயற்பாட்டுக்கான புகையிரதம் இன்று (10) காலை 6.30 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இருந்து தெற்கு நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை சேகரிக்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகம் இலங்கை புகையிரத திணைக்களத்துடன் இணைந்து இவ்விசேட ரயில் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இப்புகையிரதம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மெதவச்சி, அநுராதபுரம், மாவோ, கணேவத்த, குருணாகல, பொல்கஹாவெல, அலவ்வ, அம்பேபுஸ்ஸ, மீரிகம, வேயங்கொட, கம்பஹா, கணேமுல்ல, ராகம, ஹூணுபிட்டிய, களனி, தெமட்டகொட, மருதானை, கோட்டை, கல்கிஸ்ஸ, மொரட்டுவ மற்றும் பாணந்துர ஆகிய புகையிரத நிலையங்களில் நிறுத்தப்படும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமையலறை பொருட்கள், துப்புறவு பொருட்கள், உலர் உணவு, பாடசாலை மாணவர்கள் மற்றும் வளர்ந்தோருக்கான உடைகள், பெட்சீட்கள், தலையணை உரைகள், துவாய்கள், சுகாதார துவாய்கள், நுளம்பு வலை, டெட்டோல், மலசலகூட துப்புறவாக்கிகள், சவர்க்காரம், பாடசாலை உபகரணங்கள், விளையாட்டப் பொருட்கள், மற்றும் நூலகங்களுக்கான புத்தகங்கள் என்பவற்றை சேகரிப்பதே இவ்விசேட ரயிலின் நோக்கமாகும்.