இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்த காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய நோர்வே அரசாங்கம் 180 மில்லியன் வழங்கும் என அந்நாட்டு வௌிவிவகார அமைச்சர் பர்கே ப்ரெண்ட வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐநா சிறுவர் நிதியம், மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான குடிநீர், சுகாதாரம், ஆரோக்கிய பாதுகாப்பு மற்றும் கல்வி என்பவற்றை மேம்படுத்த இந்நிதி வழங்கப்படவுள்ளது.
செஞ்சிலுவை சங்கத்தினூடாக தற்காலிக முகாம்களில் குடிநீர் வசதி, சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கும் இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
நோர்வே உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் நிதியினூடாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் மற்றும் நோர்வே புவியில் தொழில்நுட்ப நிறுவனம் என்பவற்றினூடாக இலங்கையில் மண்சரிவு அபாயம் ஏற்பட்ட பிரதேசங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன.
ஐநா பங்குதார நாடுகள் அவசர அனர்த்த நிலைகளுக்கு முகங்கொடுக்கும் சந்தர்ப்பங்களில் உதவி வழங்கும் நான்கு நாடுகளில் நோர்வேயும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.