சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு
சீருடை மற்றும் பாடசாலைப் புத்தகங்கள் உள்ளிட்ட கற்கை உபகரணங்கள் அடங்கிய பொதி வழங்கப்படவுள்ளது என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாணவருக்கும் பத்தாயிரம் பெறுமதியான பாடசாலை உபகரண பொதி வழங்கப்படவுள்ளது. தனியார் நிறுவனங்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மாணவர்களின் வாழ்வை கட்டியெழுப்பும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் பொதியிடும் நடவடிக்கை தற்போது இறுதிகட்டத்தை பூர்த்தியடையும் நிலையில் உள்ளது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இப்பொதியில் பாடசாலை சீருடை, அப்பியாசக் கொப்பிகள், பாடப்புத்தகங்கள், சீருடைத் துணிகள், உபகரணங்கள் மற்றும் சப்பாத்துக்கான வவுச்சர் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றும் கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.