சிறுநீரக நோயாளருக்கான மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில், இது வரை மாதாந்தம் ரூபா 3,000 ஆக வழங்கப்பட்ட குறித்த கொடுப்பனவு ரூபா 5,000 ஆக வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் பேருக்கு, அரசாங்கம் குறித்த கொடுப்பனவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.