இந்தியாவின் ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழி கற்கைகள் பிரிவொன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சிங்கள மொழி, வரலாறு மற்றும் இலங்கையின் கலாசாரம் என்பவற்றை அறிந்து கொள்வதற்கு ஆவலாக இருக்கும் இந்திய மற்றும் சார்க் நாடுகளுடன் உட்பட ஏனைய நாட்டு மாணவர்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இப்பிரிவு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழி கற்கைகள் பிரிவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வது தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.