உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று (06) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சராக பதவியேற்ற பின்னர் ரவி கருணாநாயக்க மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
இந்திய வெளிவிவகார அமைச்சரையும் சந்தித்து கலந்துரையாடிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ். ஜெய்சங்கரை இன்று (07) சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என்றும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.