பொலன்னறுவையில் சிறுநீரக மருத்துவமனை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (06) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்ரகுப்த அவர்களும், சீன அரசாங்கத்தின் சார்பில் சீன தூதரக பொருளாதார மற்றும் வர்த்தக ஆலோசகர் Yang Zuoyuan அவர்களும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி சீன ஜனாதிபதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலுக்கமைய சீன அரசின் அன்பளிப்பாக இம்மருத்துவமனை நிர்மாணிக்கப்படவுள்ளது.
200 கட்டில்கள், 100 குருதி சுத்திகரிப்பு கருவிகள், சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்யக்கூடிய நவீன சத்திரசிகிச்சைக் கூடம் ஆகியவற்றுடனான தேசிய தரத்துடன் கூடிய இந்த மருத்துவமனையை செலவழிப்பதற்கு 12 பில்லியன் ரூபா செலவாகும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. நிர்மாணிக்கப்படவுள்ளது.
மூலகாரணம் இனங்காணப்படாத சிறுநீரக நோயினால் நாடுமுழுவதும் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நீண்டகால தேவைகளை நிறைவுசெய்வதற்காக நிர்மாணிக்கப்படும் இந்த சிறுநீரக மருத்துவமனைக்கான அடிக்கல் எதிர்வரும் ஜூலை மாதம் ஜனாதிபதியினால் நாட்டப்படும்.
அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சிறுநீரக நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணி பணிப்பாளர் அசேல இத்தவெல, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரோகண கீர்த்தி திசாநாயக்க, பொலநறுவை தேசிய மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவ கலாநிதி சம்பத் இந்திக்க குமார சீன தூதுவர் Yi Xianliang உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.