எதிர்வரும் 2019ம் ஆண்டளவில் மீன்பிடித்துறையில் 120,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மீன்பிடித்துறை மற்றும் கடல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மன்னார் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் முறையே 3000 மற்றும் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்படவுள்ள கைத்தொழில் பேட்டையில் 40,000 வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படவுள்ளதுடன் ‘Crab City’ (நண்டு நகரம்) என்ற பெயரில் அம்பாந்தோட்டையில் உருவாக்கப்படவுள்ள நீர்வாழ் உயிரின பூங்காவில் 20,000 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படவுள்ளன.
மேலதிகமாக 60,000 வேலைவாய்ப்புகள் கப்பரதொட்ட பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள மீன், நீர்வாழ் தாவர உணவு நிலையம் மற்றும் நாடு முழுவதும் உள்ள நீர்வாழ் உயிரின உற்பத்தி மத்திய நிலையங்கள் மற்றும் நீர்நிலைகள் மற்றும் குளங்களினூடாக உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.