சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் அழிவுற்ற வீடுகளை மீள நிர்மாணிப்பதற் கு அமெரிக்க அரசாங்கம் 350 மில்லியன் ரூபா நிதியை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் உள்ளிட்ட பிரதிநிதிகள் அந்நிதியை நேற்று (04) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்தனர்.
மேலும் நாட்டிலுள்ள இளைஞர், யுவதிகளின் நிபுணத்துவ ஆற்றலை மேம்படுத்துவதற்காக 12 மில்லியன் டொலரை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. நான்கு ஆண்டுகளில் அந்த உதவியை மேற்கொள்ள இருப்பதாக அமெரிக்க தூதுவர் இதன்போது குறிப்பிட்டார்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்ட பாடசாலைகளை துப்பரவு செய்வதில் அமெரிக்க பிரதிநிதிகள் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த செயற்பாடு தொடர்ந்து இடம்பெறுமென்றும் அமெரிக்க தூதுவர் மேலும் தெரிவித்தார்.