மாத்தறை மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (05) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலகத்தின் நடைபெறவுள்ளது.
மாத்தறை மாவட்டச் செயலகத்தின் காமினி ஜயசேக்கர கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலில் அவசர அனர்த்த நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் இதற்குப் பிறகு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.