அதிகளவு சீனி உட்கொள்கின்றமையினால் நாடடின் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் பிரியங்கர ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (01) ஆரம்பமாகும் தேசிய போஷாக்கு மாதம் தொடர்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் தொற்றா நோய்க்கு ஆளாகியுள்ளனர். நூற்றுக்கு 35 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு காரணமாக அதிக இரத்த அழுத்தம், இருதய நோய் என்பன ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதற்கு எமது உணவு முறையே பிரதான காரணம். இன்று நாடு முழுவதும் சூன் பான கலாசாரம் காணப்படுகிறது. இதில் இருந்து நாம் விலக வேண்டும்.இன்று யாரும் நடந்து செல்வதில்லை. உடற்பயிற்சி செய்வதில்லை. உணவுக் கட்டுப்பாடு இல்லை. சீனி பாவனையை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.