இலங்கையில் எதிர்பாராத தருணத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்பும் வெளிநாட்டவர்கள் பண வைப்பு செய்வதற்கான விசேட வங்கிக் கணக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட இலங்கையருக்கு உதவ வெளிநாட்டவர்களும் முன்வந்துள்ளதைக் கருத்திற்கொண்டு இப்புதிய வங்கிக் கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கமைய, சம்பத் வங்கியில் 5 விசேட வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து நிதி வைப்பை மேற்கொள்வதற்கான SWIFT அடையாளம் BSAMLKLX என்பதாகும்.
வெளிநாட்டு பணங்களுக்கேற்ப வங்கிக் கணக்குகள்
1. அமெரிக்க டொலர் (USD) 5029 6000 2000
2. ஸ்ட்ரேலின் பவுன் (GBP) 5029 6100 2000
3. ஜப்பான் யென் (SPY) 5029 6400 2000
4. அவுஸ்திரேலிய டொலர் (AUD) 5029 6600 2000
5. யூரோ (EUR) 5029 6900 2000
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டவர்களால் வழங்கப்படும் இந்நிதியுதவியானது சொத்துக்களை புனரமைப்புச் செய்வதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் அரசாங்கம் துரித நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.