சர்வதேச புகைத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொடி செயற்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான முதலாவது கொடி இன்று (31) காலை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ஸ்க்கு வழங்கப்பட்டது.
'தீய பழக்கங்களை ஒழித்து நிரந்தர மகிழ்ச்சியை அனுபவிப்போம் – ஆரோக்கியமான தேசத்தை கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில் இவ்வருடத்துக்கான கொடிவாரம் நடைபெறுகிறது.
இன்று முதல் ஜூன் மாதம் 30ம் திகதி வரையான ஒரு மாத காலத்திற்கு நாடு முழுவதும் கொடிவாரம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மாவட்ட அரசாங்க அதிபருக்கு மாவட்ட திவிநெகும பிரதிப்பணிப்பாளர் எம்.குணரெத்தினம், திவிநெகும வங்கி முகாமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் கொடியை வழங்கி வைத்தனர்.
LDA_dmu_batti