அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முறையாகவும் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளவதை இலகுபடுத்த பெற்றோலிய வளத்துறை அமைச்சு புதிய தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் எரிபொருள் தட்டுப்பாடு அல்லது விநியோகிப்பதில் சிரமம் நிலவும் பட்சத்தில் உடனடியாக 07750 30 222 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு பெற்றோலிய வளக்கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் இலங்கை கணிய வள களஞ்சியப்படுத்தல் நிறுவனம் (CPSTL) என்பன பொதுமக்களிடம் கோரியுள்ளது.
அனர்த்த நிலைமைக் காரணமாக இன்று (30) காலையில் தென் மாகாணத்தில் 11 எரிபொருள் நிரப்பு நிலையங்களும் மேல் மாகாணத்தில் 7 எரிபொருள் நிலையங்களும் சப்ரகமுவ மாகாணத்தில் 5 நிலையங்களும் செயலற்றிருந்தது.
எனினும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் ஆலோசனை மற்று வழிகாட்டலின் கீழ் அவ்வெரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளன.
இவ்விலக்கம் 24 மணித்தியாலயங்களும் செயற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.