• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

மீட்புப்பணிகளில் கடற்படையினர்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
 
தெற்கு, மேற்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு 112 டிங்கி படகுகளுடன் 112 கடற்படைக் குழுவினர் களத்தில் இறங்கியுள்ளனர் என்றும் நிவாரண பணிகளுக்காக 889 கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
 
 
 
அதற்கமைய தென் மாகாணத்தில் 56 கடற்படை குழுக்களும் மேல் மாகாணத்தில் 56 குழுவினரும் நிவாரண பணிகள் மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
 
காலி மாவட்டத்தின் நெளுவ, இமதுவ, வந்துரம்ப, உடுகம, எல்பிட்டிய, அம்பலங்கொட, போபே, போத்தலே மற்றும யக்கமுல்ல ஆகிய பிரதேசங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில்  ஹேனேகடுவ, ரன்ன ஆகிய பிரதேசங்களிலும் மாத்தறை மாவட்டத்தின் கம்புருபிட்டிய, மொரவக்க, அக்குரஸ்ஸ, பிட்டிபெத்தர, தெய்யந்தர ஆகிய பிரதேசங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, பரகொட, பதுரலிய, கல்கெடிய, இலுக்பத்தான, மத்துகம, பெலேன ஆகிய பிரதேசங்களிலும் கடற்படையினர் மீட்புப்பணிகளில் ஈடுட்டுள்ளனர்.
 
, மேலும் கொழும்பு மாவட்டத்தின் வெல்லம்பிட்டிய, நவகமுவ, ஹங்வெல்ல, அவிஸ்ஸாவெல்ல, பாதுக்க, களனிய, அம்பதலே, களனி, அங்கொட, கடுவெல ஆகிய பிரதேசங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தின்  இரத்தினபுரி  நகரை அண்மித்த பகுதி, கலவான, நிவித்திகல, எஹலியகொட, எலபாத்த, சமன்தேவலாலயம், மாரகஹ முச்சந்தி, அயமக, தல்துவ, கிரிஎல்ல ஆகிய பிரதேசங்களிலும் கம்பஹா மாவட்டத்தில் பியகம, ஆகிய பிரதேசங்களிலும் கடற்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
 
இதேவேளை, கடற்படையின் வைத்தியக்குழுவினர் 114 பேருக்கு சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன் 106 கிணறுகளை தூய்மையாக்கும் பணியிலும் வக்வெல்ல, பிட்டபெத்தர பாலங்களில் சிக்கியிருந்த குப்பைகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
 
இதுவரை கடற்படை மீட்புக்குழுவினரால் 8941 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து 136,313 உணவுப் பொதிகளையும் வழங்கியுள்ளனர்.
 
 
 
இடர் முகாமைத்துவ மத்திய நிலையங்களை உடனடியாக தொடர்புகொள்ள
 
அவசர இலக்கம் 117
சாதாரண இலக்கம்  011 2136136         
 
அவசர தொடர்பு மையம் 011 2136222, 011 2670002
 
தொலைநகல் 011 2670079
 
 
மாவட்ட செயலகங்கள் மற்றும் செயலாளர்கள் தொடர்பு இலக்கங்கள்
 
 
 
இரத்தினபுரி மாவட்டம்            
0452222235 / 0714423760
களுத்துறை
034 2222235 / 0716814813
காலி
0912234235 / 0714415377
மாத்தறை
0412222235 / 0776864397
அம்பாந்தோட்டை
0472256235 / 0714441612
கொழும்பு
0112369134 / 0773184910
கம்பஹா
கேகாலை

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

cabinet Decisions 12.08.2024

13 August 2024

Cabinet Decisions taken at  the Cabinet Meeting Conducted ...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.