வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக உருவான மோரா சுழற்காற்று இன்று (30) பங்களாதேஷ் நிலப்பகுதி நோக்கி சென்று பலவீனமடையும் என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
எனினும் இதன் தாக்கம் காரணமாக இலங்கையில் வானம் கருமுகிழ் சூழ்ந்தாக காணப்படும். மழை பெய்யக்கூடும் என்றும் காற்றின் தாக்கம் காணப்படும் என்றும் எதிர்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக மத்திய மலைப் பிரதேசங்களின் கிழக்கு திசையில் இந்நிலை காணப்படும் என்றும் நாட்டை சூழவுள்ள பிரதேசங்களில் மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் கடுமையான காற்று வீசக்கூடும் என்றும் மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மத்திய மற்றும் வட மேல் மாகாணங்கள் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.