வௌ்ளம் மற்றும் மண்சரிவு என்பவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (30) தொடக்கம் எதிர்வரும் ஜூன் இரண்டாம் திகதி வரை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று (29) இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
கொழும்பு, காலி, மாத்தறை, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, கேகாலை, களுத்துறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களே அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.