நாட்டில் ஏற்பட்டுள்ள வௌ்ளம் மற்றும் மண் சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று வரை (29) உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அதில் 71 மரணங்கள் இரத்தினபுரி மாவட்டத்திலும் 53 மரணங்கள் களுத்துறை மாவட்டத்திலும் இடம்பெற்றுள்ளன.
இடர் முகாமைத்துவ மத்திய நிலைய அறிவித்தலுக்கமைய இதுவரை 128586 குடும்பங்களைச் சேர்ந்த 471542 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்த 18652 குடும்பங்களைச் சேர்ந்த 75236 பேர் 336 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்