பத்தேகம பிரதேசத்தில் இடம்பெயர்ந்த கிராமத்தில் விமானத்தின் ஊடாக உணவு மற்றும் வேறு அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும்வேளையில் அனர்த்தத்திற்கு உள்ளான ஹெலிகொப்டரின் விமானக் குழுவின்
தலைவர் பானுக தெல்கஹகொடவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் தொடர்புகொண்டார்.
இந்த சம்பவத்தின்போது இவர் மேற்கொண்ணட வீரம் மிகுந்த செயற்பாட்டிற்கு ஜனாதிபதி பாராட்டுத்தெரிவித்தார்.
ஒரு தொகை பொருட்களுடன் சென்ற இந்த ஹெலிகொப்டர் பத்தேகம பிரதேசத்தில் குறிப்பிட்ட கிராமத்தில் தரையிறங்க முற்பட்டவேளையில் ஹெலிகொப்டரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையினால் குறித்த விமானி பாதுகாப்பான முறையில் ஹெலிகொப்டரினை வெள்ளத்தின் மேல் தரை இறக்கியுள்ளார்.
அவரும் ஏனைய அனைத்து செயற்குழுவினரும் பாதுகாப்பான முறையில் இருப்பதுடன் , ஹெலிகொப்டருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என விமானப்படை தெரிவித்துள்ளது.