மத்திய வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக கிழக்கு நோக்கி உருவான சுழல் காற்று (MORA) நாட்டுக்கு வெகுதொலைவில் சென்றுள்ளதாக வானிலை அவதான நிலையம் இன்று (29) அறிவித்துள்ளது.
இதன் தாக்கம் காரணமாக நாட்டில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் காற்றுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக மத்திய மலை நாட்டின் கிழக்கு பகுதிகளில் உள்ள கடற் பிரதேசத்தில அவ்வப்போது மணிக்கு 80 கிலோ மீற்றர் வரை கடுங்காற்று வீசும் சாத்தியங்கள் காணப்படுகின்றன.
மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். குறிப்பாக மத்திய மலைநாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.
வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.