நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்திற்ககொண்டு இவ்வாண்டு க.பொ. சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்குமாறு கல்வியமைச்சர் பரீட்சை திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இம்மாதம் 31ம் திகதியுடன் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் திகதி நிறைவடையவுள்ள நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் 15ம்திகதி வரை நீடிக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள உறுப்பினர்களுடைய அனைத்து கல்விச் சான்றிதழ்களையும் இலவசமாக வழங்குமாறும் கல்வியமைச்சர் பரீட்சைத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.