இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 15 மில்லியன் யுவான் பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்குவதாக சீன அரசு அறிவித்துள்ளது.
தற்காலிக கூடாரங்கள் உட்பட அத்தியவசிய பொருட்கள் அடங்கிய பொருட்களை வெகு விரைவில் அனுப்புவதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையில் மண்சரிவு மற்றும் வௌ்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள பேரழிவு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபாலவை தொடர்புகொண்டு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களுக்கும் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நீண்ட கால உறவை பேணும் நாடு என்றவகையில் இத்தகைய அவசரகால நிலைமையில் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாகவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சீன பிரதமர் லீ கே சியாங் இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைக்கு தாம் மிகவும் கவலையடைவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தகவல் அனுப்பியுள்ளார்
இதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அழிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாக சீன வௌிவிவகார அமைச்சர், இலங்கை வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு தகவல் அனுப்பியுள்ளார். இலங்கை அரசும் மக்களும் விரைவில் மீண்டு எழுவர் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.