அனர்த்த நிலைமைக்கு முகங்கொடுத்துள்ள பிரதேசங்களில் பாடசாலை நடத்துவதா இல்லையா என்பதை அந்ததந்த பாடசாலைகளின் அதிபர்களே தீர்மானிப்பதற்கான அனுமதியை வழங்குவதென கல்வியமைச்சர் தீர்மானித்துள்ளார்.
அனர்த்த நிலையினால் தனது பாடசாலை எத்தகைய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்பது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்தார்.
குறித்த தீர்மானம் குறித்து மாகாண பாடசாலையென்றால் மாகாண அல்லது வலய பணிப்பாளருக்கும் தேசிய பாடசாலையெனின் தேசிய பாடசாலை பணிப்பாளருக்கு அறிவித்து நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை வெகு விரைவில் தனக்கு கையளிக்குமாறு அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பாடசாலை பிள்ளைகளுக்கு அவசியமான பாடப்புத்தகங்கள், உட்பட அனைத்து உபகரணங்களையும் ஏனைய நிவாரணங்களையும் வழங்க இத்தகவல் திரட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.