இந்திய அரசின் நிவாரண மற்றும் மருத்துவ உதவிகள் அடங்கிய இரண்டாவது கப்பல் இன்று (28) மாலை 2.25 மணியளவில் இலங்கை துறைமுகத் வந்தடைந்தது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைக்காரணமாக உதவி வழங்க முன்வந்துள்ள இந்திய அரசாங்கம் ஏற்கனவே நேற்று (27) நிவரண பொருட்கள் அடங்கிய கப்பலை இலங்கைக்கு அனுப்பியிருந்தது.
நிவாரண பொருட்களை வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
நிவாரண பொருட்கள் அடங்கிய மூன்றாவது கப்பல் நாளை (29) இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.